சிம்புவை உதறி தள்ளிய அன்புமணி

சர்க்கார் பட ஃபர்ஸ்ட்லுக்கில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிக்கு பல தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வந்தன. அதே போல் தான் பா.ம.க., அன்புமணியிடம் இருந்தும் வந்தது. என்ன கொஞ்சம் அதிகமாகவே வந்தது.

அன்புமணியின் இந்த கருத்துகளை பலரும் வரவேற்ற போதிலும் சிம்புவின் குடும்பத்தில் ஏதோ சொல்லி வைத்ததுபோல டி.ஆரும் சிம்புவும் எதிர்த்தனர்.

இதை நேற்று சிம்பு வெளியிட்ட வீடியோவில் பார்த்திருக்கலாம். மேலும் அவர் அன்புமணிக்கு என்னுடன் விவாதிக்க ரெடியா என சவாலும் விட்டிருந்தார்.

இந்த சவாலுக்கு பதிலளித்த அன்புமணி, ‘சிம்புவின் கேள்விக்கு நான் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. வேண்டுமானல், நடிகர் சங்க கூட்டத்தை கூட்டுங்கள் அங்கு நான் விவாதிக்கிறேன்’ என கூறியுள்ளார்.

இந்த கருத்து அன்புமணி சிம்புவை மதிக்கவில்லை என்பதையே காட்டுகிறது என கோலிவுட் வட்டாரங்கள் பேசி கொள்கின்றன.