கெட்ட வார்தையில் திட்டிவிட்டு காலில் விழாத குறையாக கெஞ்சிய மஹத்! கண்ணீர் விட்ட பாலாஜி!

தற்போது பிக்பாஸ் கொடுத்துள்ள "திட்டம் போட்டு திருடுற கூட்டம்" டாஸ்க் பெரிய அளவில் பிரச்னையை உருவாக்கியுள்ளது. போலீசாக உள்ள நடிகர் மஹத் மற்றும் பாலாஜி இடையே பெரிய அளவில் சண்டை வெடித்தது.

சாப்பாடு வாங்க காசு கொடுக்க முடியாது என போலீஸ் மஹத் சொல்ல, "பிச்சை எடுத்து சாப்பிடு" என பாலாஜி சொல்ல அது பிரச்னை ஆனது. கோபத்தில் மஹத் கெட்ட வார்த்தைகளில் திட்டினார்.

பின்னர் அவரே சென்று பாலாஜியிடம் காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்டார். வயதுக்கு கூட மதிப்பு கொடுக்காமல் இப்படி பேசியதற்கு பாலாஜி கண்ணீர் விட்டு அழுதார்.. மஹத்திடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.