தேசிய அளவில் ட்ரெண்ட் செய்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தற்போது ட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள சீமராஜா படம் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாவதாக முன்பே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்கம் இதை உறுதிசெய்து அக்டோபர் 13ம் தேதி சீமராஜா ரிலீஸ் செய்யலாம் என அனுமதி கடிதம் கொடுத்துள்ளது.

ரிலீஸ் தேதி உறுதியானதால் தற்போது சிவகார்த்திகேயன் ரசிகர்கள் #SeemaRajaReleasingOnSep13th என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இது இந்திய அளவில் தற்போது முதலிடத்தில் உள்ளது.