மாணவர்களை கடுமையாக தாக்கிய குளவிகள்! ஒட்டுச்சுட்டானில் சம்பவம்

முல்லைத்தீவு - துணுக்காய் கல்வி வலயத்துக்கு உட்பட்ட ஒட்டுசுட்டான் ஆறுமுகம் வித்தியாலய வளாகத்தில் 12 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இன்று காலை பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பித்துக்கொண்டிருந்த வேளையில் திடீரென வந்த குளவிகள் மாணவர்களை தாக்கியுள்ளது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது குறித்த பாடசாலையை சேர்ந்த 8 மாணவர்களும், பெற்றோர் ஒருவரும், அயல் பாடசாலை ஆசிரியர் ஒருவரும், மாணவர்கள் இருவருமாக மொத்தம் 12 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குறித்த அனைவரும் ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அத்துடன், பாடசாலை மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு பெற்றோருடன் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.