மயிலிட்டித் துறைமுகத்தில் பெரும் மகிழ்ச்சியில் மீனவர்கள்

வலி.வடக்கு மயிலிட்டித் துறைமுகத்தில் மீனவர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அதிகளவான மீன்களை பிடித்து அவ்விடத்திலேயே விற்பனை செய்வதுடன், வெளி இடங்களில் உள்ள சந்தைகளுக்கும் அனுப்புகின்றனர்.

இலங்கையின் மொத்த மீன்பிடியில் மூன்றிலொரு பங்கை தன்னகத்தே கொண்டிருந்த மயிலிட்டித் துறைமுகம் 27 ஆண்டுகளின் பின் அண்மையில் விடுவிக்கப்பட்டது.

இப்பகுதியில் அதிகளவான மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருவதுடன், மீன்படி தொழிலையே இவர்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த துறைமுகத்தில் அதிகளவான மீன்கள் பிடிக்கப்படுவதோடு, அவ்வித்திலேயே விற்பனை செய்வதும், வெளி இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றது.

அத்துடன், பிடிக்கப்படும் மீன்களை அயலூர் தொழிலாளர்களுக்கும் மலிவான விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.