கவர்ச்சி நடிகை விசித்ராவுக்கு இவ்வளவு பெரிய மகன்களா?

முத்து, வில்லாதி வில்லன், ராசி போன்ற ஒரு 30 தமிழ் படங்களில் நடித்தவர் விசித்ரா. குறிப்பாக இவர் கவர்ச்சி நடனங்களுக்கு பெயர் போனவர் என்றே கூறலாம். 10 படிக்கும் போதே இவருக்கு சினிமா வாய்ப்பு வந்து நடிக்க வந்துள்ளார். சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே சீரியலிலும் நடித்திருக்கிறார்.

இவர் எல்லோருக்கும் தெரியவந்தது ரஜினியின் முத்து படத்தில் ரதிதேவி என்ற கதாபாத்திரம் மூலம் தான். நிறைய வாய்ப்புகள் வந்தும் சினிமா வேண்டாம் என்று 2001ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இப்போது இவருக்கு மூன்று ஆண் குழந்தைகளாம். தற்போது விசித்திரா கவுன்சலிங் படித்துவிட்டு அதற்கான வேலையை அவ்வப்போது செய்து வருகிறாராம். அதுமட்டும் இல்லாமல் ஜெயா கிச்சன்ஸ் என்ற ஒரு கம்பெனியையும் நடத்தி வருகிறார்.

குடும்பம், தொழில் என சந்தோஷமாக இருப்பதாகவும் அண்மையில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.