காதலர் தினம் புகழ் நடிகை சோனாலிக்கு புற்றுநோய்- நோய் அறிந்த பின் நடிகை செய்த செயல்

காதலர் தினம் இந்த படத்தையும், பட பாடலையும் சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாது. அந்த அளவிற்கு இப்படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது, இப்போதும் இந்த படத்திற்கு பல ரசிகர்கள் உள்ளனர்.

இப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்திற்கு வந்தவர் சோனாலி. சில தமிழ் படங்களே நடித்த இவர் ஹிந்தியில் அதிக படங்கள் நடித்துள்ளார்.

அண்மையில் இவர் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிவித்து பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார். இந்த நேரத்தில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற அவர் தனது தலைமுடியை வெட்டியுள்ளார். அந்த புகைப்படத்தை டுவிட்டரில் போட ரசிகர்கள் சோனாலி விரைவில் குணமடைய வேண்டும் என்று பதிவு செய்து வருகின்றனர்.