ஒரே நாளில் 2 முக்கிய படங்கள் ரிலீஸ்: திரையுலகம் ஷாக்!

வரும் 13ஆம் தேதி 'கடைக்குட்டி சிங்கம்' மற்றும் 'தமிழ்ப் படம் 2.0' ஆகிய 2 படங்களும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஒரே நேரத்தில் இவ்விரு முக்கியப் படங்களும் வெளியாவதை சில திரைப்படத் தயாரிப்பாளர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் விரும்பவில்லை.

நல்ல வசூல் கிடைக்க வேண்டுமென்றால், இவ்விரண்டில் ஒரு படத்தை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கலாம் என்றும் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.