ஆனந்தசுதாகரனின் விடுதலையை வலியுறுத்திய மாநகரசபை உறுப்பினர் சுட்டுக் கொலை!!

இன்று காலை 7.45 மணியளவில் புறக்கோட்டை – ஹெட்டிவீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் மாநகர சபை உறுப்பினர் கிருஸ்ணபிள்ளை கிருபானந்தன் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 7.45 மணியளவில் புறக்கோட்டை – ஹெட்டிவீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் மாநகர சபை உறுப்பினர் கிருஸ்ணபிள்ளை கிருபானந்தன் உயிரிழந்துள்ளார்.

நவோதயா மக்கள் முன்னணியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் கைதிகள் விடயத்தில் அண்மைக்காலத்தில் அதிக அக்கறை காண்பித்ததுடன், ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளை அண்மையில் கொழும்பிற்கு அழைத்து ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி, அந்த பிள்ளைகளின் கல்வி செலவை தானே ஏற்பதாக அறிவித்திருந்தது குறிப்பித்தக்கது.