கரஞ்சித் கவுரை சந்திப்பதற்கான நேரம்; ட்ரைலரை வெளியிட்ட சன்னி லியோன்!

சன்னி லியோன் மிகவும் அறியப்படும் சினிமா பிரபலமும், பாலிவுட் நடிகையும் ஆவார். அவளுடைய அசல் பெயர் கரேன்ஜித் கவுர் வோரா, சன்னி லியோன்  என்று நன்கு அறியப்படும். அவரது வாழ்க்கையில் பல்வேறு திருப்பங்கள் மற்றும் இடர்பாடுகளை சந்தித்து, இறுதியாக  சினிமா துறையில் முடிந்தது.

இந்நிலையில் தற்போது நடிகை சன்னி லியோன் நடிக்கும் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றுத் தொடரான கரஞ்சித் கவூர் ட்ரெயிலைரை வெளியிட்டுள்ளார்.

திருமணம் செய்து கொண்டதோடு மூன்று குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வரும் சன்னி லியோன், பல்வேறு சமூக சேவை சார்ந்த விஷயங்களிலும்  நாட்டம் காட்டும் நடிகை. அவரின் திரைவாழ்க்கைக்குப் பின்னால் இருக்கும் திரைமறைவு வாழ்க்கை ரகசியம் என்னவென்று தெரிந்துகொள்ள யாருக்குத்தான் ஆசை இருக்காது? கனடாவில் ஒரு நடுத்தர வர்க்க சீக்கிய குடும்பத்தில் பிறந்த சன்னி லியோனின் இயற்பெயர்தான் கரஞ்சித் கவுர். இவரது வாழ்க்கை தற்போது  வெப் சீரிஸாக மலர்ந்துள்ளது. 

இதில் சன்னி லியோனாக அவரே நடித்துள்ளார். சீ5 நிறுவனம் தயாரிக்கும் "கரஞ்சித் கவுர்" வெப் சீரீஸில் சன்னி லியோனின் சிறுவயது கதாபாத்திரமாக  "டோபரா" என்ற இந்தி படத்தில் நடித்த 14 வயது ரைசா சௌஜானி நடிக்கிறார். முதல் பாகம் ஜூலை 16ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் ட்ரெயிலரை  ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் சன்னி லியோன்.

அதில் "நீங்கள் சன்னி லியோனை பார்த்துள்ளீர்கள்... இது கரஞ்சித் கவுரை சந்திப்பதற்கான நேரம் என ட்வீட் செய்துள்ளார்.

Karenjit Kaur: The Untold Story of Sunny Leone | Uncut Trailer | Premieres 16th July on ZEE5