நல்லுார் பிரதேச உபதவிசாளர், தம்பி ஆகியோரே வாள்வெட்டு சம்பவங்களின் சூத்திரதாரிகள்!!

வாள்வெட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாக தமிழரசுக் கட்சியின் நல்லூர் பிரதேச சபை பிரதித் தவிசாளரான இராசமனோகரன் யெகரனின் மோட்டார் சைக்கிள் பொலிசாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை அவரது சகோதரரும் இன்று (01) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார் என எமது முத்தமிழ் செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆவா குமுவில் இருந்து பிரிந்து சென்ற தனுரொக்கின் வீட்டின் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே மானிப்பாய் பொலிசாரினால் இன்றைய தினம் இருவரை கைது செய்துள்ளனர். அதன்போது அவர்களின் பயன்பாட்டில் இருந்ததாகக் கூறப்படும் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிள் தனுரொக்கின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் உள்ளிட்ட வாள்வெட்டுச் சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள பொலிசார் அவ் வாகனம் தமிழரசுக் கட்சியின் நல்லூர் பிரதேச சபை பிரதித் தவிசாளரான இராசமனோகரன் ஜெயகரனின் பெயரில் உள்ளதாகவும் அவரும் குறித்த வாகனத்தை பயன்படுத்திவருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் நல்லூர் பிரதேசசபையின் உப தவிசாளர் இராசமனோகரன் ஜெயகரன் அவர்களின் சகோதரனான பிரபல ஆவாக்குமுவின் மூத்த உறுப்பினர் தம்பன் என அழைக்கப்படும் திவாகரன் என தெரியவருகிறது.

மற்றைய நபர் பற்றிய தொடர்பான தகவல்களை பொலிஸ்சார் இது வரை வெளியிடவில்லை.

நல்லுார் பிரதேசசபை உபதவிசாளர் யெகரன்

நல்லுார் பிரதேசசபை உபதவிசாளர் யெகரன்

தம்பன் என அழைக்கப்படும் திவாகரன்

தம்பன் என அழைக்கப்படும் திவாகரன்