வடக்கல் போலி நிய­ம­னங்­கள் தாரா­ளம்! வெளியான எச்சரிக்கை..

வடக்கு மாகா­ணப் பாட­சா­லை­க­ளுக்கு கல்­வி­சாரா பணி­யா­ளர்­க­ளாக, கொழும்பு கல்வி அமைச்­சின் போலி இறப் பர் முத்­தி­ரை­க­ளைப் பயன்­ப­டுத்தி நிய­ம­னங்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளது. 

இந்த மோச­டிச் செயற்­பா­டு­க­ளுக்கு தர­கர்­கள் பெரு­ம­ளவு பணத்­தைப் பெற்­றுக் கொண்­டுள்­ள­னர்.

இந்த முறை­கேடு தொடர்­பில் எனக்கு முறைப்­பாடு தெரி­விக்­கப்­பட்­டது. கல்வி அமைச்­சர் அகில விராஜ்­கா­ரி­ய­வ­சத்­தின் கவ­னத்­துக் கொண்டு சென்­றேன்.

இது தொடர்­பில் அவர் விசா­ரணை நடத்­து­மாறு பணித்­துள்­ளார். இவ்­வாறு கல்வி இரா­ஜாங்க அமைச்­சர் இரா­தா­கி­ருஸ்­ணன் தெரி­வித்­தார்.

பரு­தித்­துறை மெத­டிஸ் பெண்­கள் உயர்­த­ரப் பாட­சாலை, வட­இந்து மக­ளிர் கல்­லூரி, வட­ம­ராட்சி தேவ­ராளி இந்­துக் கல்­லூரி, மானிப்­பாய் மக­ளிர் கல்­லூரி ஆகி­ய­வற்­றில் கல்வி அமைச்­சின் நிதி­யில் புதி­தாக அமைக்­கப்­பட்ட கட்­டங்­க­ளைத் திறந்து வைக்­கும் நிகழ்­வில் அவர் பங்­கேற்­றார். அவர் இந்த நிகழ்­வு­க­ளில் உரை­யாற்­றும்­போது தெரி­வித்­த­தா­வது,

வடக்கு மாகா­ணத்­தில் பல பாட­சா­லை­க­ளுக்­கும் கொழும்பு அர­சின் கல்வி அமைச்­சின் ஊடாக ஆள்­சேர்ப்­புச் செய்­யப்­பட்­டுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்டு, நிய­ம­னக் கடி­தத்­து­டன், நிய­ம­னம் வழங்­கப்­பட்ட பாட­சா­லை­க­ளுக்­குச் சென்­றுள்­ள­னர். பெரு­ம­ள­வா­னோர் இவ்­வாறு சென்­றுள்­ள­னர்.

அவர்­களை பாட­சா­லை­க­ளில் இணைத்­துக் கொள்­வதா இல்­லையா என்­பது தொடர்­பில் பாட­சாலை அதி­பர்­கள் என்­னி­டம் வின­வி­னர்.

கல்வி அமைச்சு ஒரு சில­ருக்கே நிய­ம­னங்­கள் வழங்­கி­யுள்­ளது. அதி­க­மான நிய­ம­னங்­கள் வழங்­க­வில்லை. கைய­ளிக்­கப்­பட்ட நிய­ம­னக் கடி­தங்­களை எனக்கு அனுப்பி வைக்­கு­மாறு பாட­சாலை அதி­பர்­க­ளைக் கோரி­னேன்.

கல்வி அமைச்­சின் அதி­கா­ரி­க­ளி­டம் அந்­தக் கடி­தங்­க­ளைக் காண்­பித்­த­போது அவை போலி­யா­னவை என்று தெரி­ய­வந்­தது. கல்வி அமைச்­சர் அகில விராஜ்­கா­ரி­ய­வ­சத்­தின் கவ­னத்­துக்கு கொண்டு சென்­றேன். அவர் உட­ன­டி­யாக விசா­ர­ணை­களை ஆரம்­பிக்­கு­மாறு பணித்­துள்­ளார்.

குற்­ற­வா­ளி­க­ளாக இனங்­கா­ணப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக கடும் சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும். தர­கர்­கள் போலி­யான நிய­ம­னங்­களை வழங்கி பெரு­ம­ளவு பணத்தை பெற்­றுக் கொண்­டுள்­ள­னர். இவ்­வா­றா­ன­வர்­க­ளி­டம் ஏமா­ற­வேண்­டாம்.

இதே­வேளை, வடக்கு மாகா­ணத்­தின் கல்வி அபி­வி­ருத்­திக்கு 6 மில்­லி­யன் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இது­வரை எந்­த­வொரு அர­சும் இவ்­வ­ளவு பெரிய நிதியை வடக்கு மாகாண கல்­விக்­கென ஒதுக்­கி­யது இல்லை – என்­றார்.

வடக்கு மாகா­ணப் பாட­சா­லை­க­ளில் நில­வும் கல்­வி­சாரா பணி­யா­ளர் வெற்­றி­டத்­துக்கே போலி நிய­ம­னக் கடி­தம் வழங்­கப்­பட்­டுள்­ளது. முகா­மைத்­துவ உத­வி­யா­ளர்­கள், நூலக உத­வி­யா­ளர்­கள், ஆய்­வு­கூட உத­வி­யா­ளர்­கள், சிற்­றூ­ழி­யர்­கள் போன்ற பதவி நிலை­க­ளுக்கே போலி நிய­ம­னம் வழங்­கப்­பட்­டுள்­ளது. போலி நிய­ம­னக் கடி­தம் சிங்­க­ளத்­தில் மாத்­தி­ரமே அமைந்­துள்­ள­தா­க­வும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.