தம்பி ராமையா, பவர் ஸ்டார் நடிக்கும் ‘10 செகண்ட் முத்தம்’

தம்பி ராமையா, பவர் ஸ்டார் முக்கிய வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘10 செகண்ட் முத்தம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

விஜய் நடிப்பில் ‘ப்ரியமுடன்’, ‘யூத்’ போன்ற படங்களை இயக்கியவர் வின்செண்ட் செல்வா. இவர் தற்போது இயக்கியுள்ள படம் ‘10 செகண்ட் முத்தம்’. எழுத்தாளர் சுஜாதா எழுதிய நாவல்களில் ஒன்றின் தலைப்பு இது. குறிப்பிட்ட நேரத்துக்குள் சவாலான மர்மங்களைக் கண்டுபிடிப்பதுதான் இந்த நாவல். அதுபோல இந்தப் படத்தின் நாயகியும் குறிப்பிட்ட நேரத்துக்குள் சில மர்மங்களைக் கண்டுபிடிப்பதால், அந்த நாவலின் தலைப்பை இந்தப் படத்துக்கு வைத்திருக்கிறார் வின்செண்ட் செல்வா.

P

புதுமுகங்கள் கீதா - சரிஷ் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில், தம்பி ராமையா மற்றும் பவர் ஸ்டார் சீனிவாசன் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்கள் இருவரையும் தவிர படத்தில் நடித்துள்ள அத்தனை பேரும் புதுமுகங்கள் தான். ரூபன் கதை, வசனம் எழுத, வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹைதராபாத், கொடைக்கானல் மற்றும் வாகாமன் ஆகிய இடங்களில் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது.