டான் டாவடிக்கக் கூடாது; கலக்கலான பஞ்ச் டயலாக்குடன் ஜுங்கா டிரெய்லர்

விஜய் சேதுபதியின் மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ள ஜுங்கா படத்தின் டிரெய்லர் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை அடுத்து விஜய்சேதுபதி-கோகுல் இணையும் திரைப்படம் ஜுங்கா. இப்படத்தில் ஹீரோயினாக ‘வனமகன்’ சயீஷா நடித்துள்ளார். மேலும், இரண்டாவது ஹீரோயினாக மடோனா செபாஸ்டியன்  நடித்துள்ளார். சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.

பாரிஸில் வசிக்கும் டானாக இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்ககிறார். இவருக்கு நண்பராக யோகி பாபு நடித்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் பாரிஸில் படமாக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த படத்தின் டிரெய்லர் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லரில் விஜய் சேதுபதி பேசும் டான் டாவடிக்கக் கூடாது, நான் ரொம்ப கஷ்டப்பட்டு வந்திருக்கிறேன் என்ற வசனங்கள் இப்படத்தில் வரும் ஹைலைட்டான காட்சிகளாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வழக்கம்போல விஜய்சேதுபதியின் இந்த படத்தின் டிரெய்லரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Junga Official Trailer | Vijay Sethupathi, Sayyeshaa, Madonna Sebas