யாழ் வட்டுக்கோட்டையில் மாணவிகளுன் ஆசிரியர் காமலீலை!!! சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டார்!!

வட்டுக்கோட்டையிலுள்ள பிரபல பாடசாலை ஆசிரியரான அவரை, பாடசாலை நிர்வாகம் இடைநிறுத்தியுள்ளதாக அறியமுடிகிறது.

“வட்டுக்கோட்டையிலுள்ள தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்கும் ஆசிரியர் அவரிடம் கற்கச் செல்லும் பதின்ம வயது மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்படுகின்றார் என சங்கானை பிரதேச சிறுவர் அலுவலகருக்கு முறைப்பாடுகள் கிடைத்தன.

அவர் தனது முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்ய மாணவிகளின் பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. அதனால் சிறுவர் அலுவலகருடன் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த விசாரணையில் மாணவிகள் மூவரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

அவற்றை அடிப்படையாக வைத்து பதின்ம வயது சிறுமியை வன்புணர்ந்த மற்றும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் ஆசிரியர் இன்று கைது செய்யப்பட்டார்.

விசாரணைகளின் பின்னர் அவர், மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆசிரியர் வட்டுக்கோட்டையில் பிரபல பாடசாலையில் கற்பிக்கின்றார். அவரை பாடசாலையிலிருந்து நீக்குமாறு பாடசாலை நிர்வாகத்துக்கு பழைய மாணவர் சங்கமும் பெற்றோரும் கடும் அழுத்தங்களை வழங்கினர்.

இந்த நிலையில் ஆசிரியர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னகர்வுகள் தொடர்பில் பொலிஸார், பாடசாலை அதிபருக்கு அறிவித்திருந்தனர்.

அதனையடுத்து ஆசிரியரை பாடசாலையிலிருந்து இடைநிறுத்துவதாக பாடசாலை அதிபர் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.