யாழில் கணவனுடன் ஏற்பட்ட சண்டையால் மனைவி எடுத்த விபரீத முடிவு

தீக் காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

தேராவில், விசுவமடுவைச் சேர்ந்த 23 வயதான மயூரன் துளசி என்ற இளம் பெண்ணெ உயிரிழந்துள்ளார்.தீக்காயமடைந்த நிலையில் துளசி தர்மபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவர் மேலதிக சிகிச்சைக்காகக் கடந்த 10ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிசிக்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நா.பிறேமகுமார் மேற்கொண்டார்.