கமல்ஹாசனைக் கண்கலங்க வைத்த ஜிப்ரான்

‘விஸ்வரூபம் 2’ படத்துக்காகக் கமல்ஹாசனைக் கண்கலங்க வைத்துள்ளார் ஜிப்ரான்.

கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் ‘விஸ்வரூபம் 2’. இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கமலும் அவரும் தொடர்ச்சியாக இணைந்து பணியாற்றும் நான்காவது படம் இது. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், “என்னுடைய படங்களின் இசைக்கோர்ப்பு வழக்கமாக மகாபலிபுரத்தில் நடக்கும். ஆனால், இந்தப் படத்தின் இசைக்கோர்ப்பு டெல்லியில் நடைபெற்றது. தேசப்பற்றுப் பாடல் ஒன்றுக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் ஒரு ராகத்தைத் தேர்ந்தெடுத்தார்.

ஏன் அந்த ராகத்தை அவர் தேர்ந்தெடுத்தார் என்று தெரிந்தபோது கண்கலங்கி விட்டோம். ‘தேஷ்’ என்ற ராகம்தான் தேசப்பற்றுப் பாடலுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று அவர் விளக்கியபோதே எங்களுக்குச் சந்தோஷமாக இருந்தது. அந்த ராகத்தில்தான் அவர் எனக்காக முதல் ட்யூன் போட்டார். ரொம்ப சீக்கிரமாகவே அந்தப் பாடலின் இசைக்கோர்ப்பு முடிந்தது” என்றார்.