பிரபுதேவா போலீஸாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

ஜெபக் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பிரபுதேவா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியுள்ளது.

தமிழில் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் பிரபுதேவா முதல் முறையாக போலீஸாக நடிக்கிறார். இப்படத்தை ஏ.சி.முகில் இயக்குகிறார். இந்தப்படத்தில் நிவேதா பெத்துராஜ் நாயகியாக நடிக்கிறார். மேலும், சுரேஷ் மேனன், இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சண்டைக்காட்சியுடன் துவங்கியுள்ளது. இத்திரைப்படத்தை ஜெபக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நேமிசந்த ஜெபக் தயாரிக்கிறார். 

p

பிரபுதேவா நடிப்பில் லஷ்மி, யங் மங் சங், சார்லி சாப்ளின் 2 உள்ளிட்ட படங்களில் ரிலீஸாக தயாராகவுள்ளது குறிப்பிடத்தக்கது.