வட­மா­காண 17 வய­துப்­பி­ரிவு கூடைப்­பந்­தாட்­டத்தில் வெற்றி மகுடம் சூடியது வேம்படி மகளிர் கல்லூரி!

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான கூடைப்­பந்­தாட்­டத் தொட­ரில் 17 வய­துப்­பி­ரிவு பெண்­க­ளுக்­கான ஆட்­டத்­தில் வேம்­படி மக­ளிர் உயர்­த­ரப் பாட­சாலை அணி கிண்­ணம் வென்­றது.

யாழ்ப்­பா­ணம் பழைய பூங்கா கூடைப்­பந்­தாட்­டத் திட­லில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் யாழ்ப் பா­ணம் இந்து மக­ளிர் கல்­லூரி அணியை எதிர்த்து வேம்­படி மக­ளிர் உயர்­த­ரப் பாட­ சாலை அணி மோதி­யது.

முத­லா­வது கால்­பாதி ஆட்­டத்­தில் வேம்­படி மக­ளிர் பாட­சாலை அணி 9:3 புள்­ளி­ க­ளின் அடிப்­ப­டை­யில் முன்­னிலை வகித்தது.

இரண்­டா­வது கால்­பாதி ஆட்­டத்­தில் வேம்­படி மக­ளிர் உயர்­த­ரப் பாட­சாலை அணி 22:2 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் வெற்­றி­பெற்­றது.

இதை­ய­டுத்து முத­லா­வது பாதி­யின் முடி­வில் வேம்­படி மக­ளிர் உயர்­த­ரப் பாட­சாலை அணி 31 புள்­ளி­க­ளை­யும், இந்து மக­ளிர் பாட­சாலை அணி 5 புள்­ளி­க­ளை­யும் பெற்­றி­ருந்­தன.

மூன்­றா­வது கால்­பா­தி­யும் 12:04 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் வேம்­படி மக­ளிர் உயர்­த­ரப் பாட­சாலை அணி­யின் வச­மா­னது. நான்­கா­வது கால்­பா­தி­யை­யும் 22:06 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் கைப்­பற்­றி­யது வேம்­படி.

ஆட்­ட­நேர முடி­வில் 65:15 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் இமா­லய வெற்­றி­பெற்று கிண்­ணம் வென்­றது வேம்­படி மக­ளிர் உயர்­த­ரப் பாட­சாலை அணி.