காதல் விவகாரத்தால் யாழ். பிரபல கல்லூரி மாணவி தற்கொலை

காதல் விவகாரத்தால் யாழ். சுன்னாகம் பிரபல கல்லூரியொன்றின் மாணவி நஞ்சருந்தித் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நேற்றுப் பிற்பகல்(10) யாழ். சுன்னாகம் கந்தரோடை கல்லூரி வீதியிலுள்ள தனது வீட்டில் வைத்து விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் பூச்சி மருந்தை அருந்தித் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், தற்கொலை செய்து கொண்ட மாணவி யாழ். சுன்னாகத்தில் இயங்கி வரும் பிரபல கல்லூரியொன்றில் க.பொ. த உயர்தரத்தில் கல்வி கற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்தாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.