வெளிநாடு செல்வதற்காக யாழில் ஜீவசங்கரி என்பவனின் திருவிளையாடல்!! கடத்தப்பட்டதாக நடிப்பு!!

பத்து நாட்களாக தன்னை யாரோ கடத்தி வைத்திருந்து தாக்கியதாகத் தெரிவித்து உடுப்பிட்டியைச் சேர்ந்த 26 வயதான ஜீவசங்கரி என்பவனின்  திருவிளையாடல் வெளியாகியுள்ளது.

இவனுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பொலிஸ்நிலையங்களில் உள்ளன. இந் நிலையில் இவன் புலம்பெயர் நாடு ஒன்றில் அடைக்கலம் கோருவதற்காக நாடகம் ஒன்றை அரங்கேற்றியுள்ளான். ஜீவசங்கரியை காணவில்லை என தந்தை மூலம் முறைப்பாட்டை பொலிசாரிடம் பதிவு செய்து விட்டு பத்து நாட்களின் பின்னர் வல்லை வெளியில் நாடகப் பாணியில் கைகால்களைக் கட்டுவித்து படுத்திருந்து படையினரின் உதவியுடன் தான் மீட்கப்பட்டதாக தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இவனை வைத்தியசாலையில் பரிசோதித்த போது, தன்னை குறித்த ஒரு அமைப்பைச் சேர்ந்தவரே கடத்தி தனக்கு பத்து நாட்களும் மயக்க மருந்து கொடுத்து வைத்திருந்ததாகவும், அதன் பின்னர் தன்னை தாக்கி வல்லை வெளியில் போட்டுச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். இவனை வாக்குமூலத்தில் நம்பிக்கையிழந்த வைத்தியர்கள் இவனை யாழ் போதனா வைத்தியசாலையில் மேலதிக பரிசோதனைக்காக அனுமதித்துள்ளனர்.

இவன் பத்து நாட்களாக மயக்கமருந்து கொடுக்கப்பட்டு மயங்கியிருந்தால் இவனது இரத்தம் பரிசோதிக்கப்பட்டு உண்மை நிலை வெளியாகும் நிலையில் இவனது நடிப்பு வெளி வந்து இவனு்ககு எதிராக பொலிசார் நடவடிக்கை எடுக்க முற்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவன் தனக்கு உயிராபத்து உள்ளது எனத் தெரிவித்து வெளிநாடு ஒன்றில் அடைக்கலம் கோருவதற்கே இவ்வாறான நடிப்பை மேற்கொண்டுள்ளான் என தெரியவருகின்றது.