வீதிக்கு இறங்கிய கொக்குவில் இந்து மாணவர்கள்

யாழ்ப்­பா­ணம் கொக்­கு­வில் இந்­துக் கல்­லூ­ரி­யில் கற்­பிக்­கும் ஆசி­ரி­யர் ஒரு­வ­ரைத் தாக்­கிய குற்­றச்­சாட்­டில், அதே பாட­சா­லை­யின் பழைய மாண­வர் இருவரைக் கைது செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.யாழ்ப்­பா­ணம், கொக்­கு­வில் இந்­துக் கல்­லூ­ரி­யில் கற்­பிக்­கும் ஆசி­ரி­யர் ஒரு­வர் இனம்­தெ­ரி­யாத சில­ரால் தாக்­கப்­ப­ட்டார்.

குறித்த ஆசி­ரி­யர் கடமை முடிந்து வீடு திருப்­பிக் கொண்­டி­ருந்­த ­போது பாட­சா­லைக்கு அண்­மை­யில் வைத்து இனம் தெரி­யாத சில­ரால் கடந்த சில தினங்­க­ளுக்கு முன்­னர் தாக்­கப்­பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பழைய மாணவர்கள் மீது பொய்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களை விடுவிக்கக் கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“தவறு செய்யாதவனுக்கு சிறைவாசம், தவறு செய்தவர்களோ உல்லாசம், அகிம்சை வழிப் போராட்டத்துக்கு ஆதரவு தாருங்கள், சிறைக்குச் சென்ற மாணவனின் மனநிலை என்னாகும்“ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பாதகைகளை மாணவர்கள் தாங்கியிருந்தனர்.