மீனவர்களின் வன்முறை வெடிக்கும்! யாழில் மாபெரும் கண்டன பேரணி

யாழ். வடமராட்சி கிழக்கில் வெளி மாவட்ட மீனவர்கள் தங்கி நின்று கடலட்டை பிடிப்பதற்கு எதிராக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தால் மாபெரும் கண்டன பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பேரணி யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் இருந்து ஆரம்பமாகி மாவட்ட செயலகம், ஆளுநர் அலுவலகம் மற்றும் யாழ். கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் வரை பேரணியாக சென்றுள்ளது.

இதில் ஏராளமான உள்ளூர் மீனவர்கள் கலந்து கொண்டதுடன், “வெளி மாவட்ட மீனவர்கள் உடனடியாக வெளியேறாவிட்டால் மீனவர்களின் வன்முறை வெடிக்கும்” என கோஷமிட்டவாறு பேரணியாக சென்றுள்ளனர்.

காலை 9.30க்கு ஆரம்பமான குறித்த பேரணி இன்னும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்..அத்துடன், மாவட்ட செயலகம், ஆளுநர் அலுவலகம் மற்றும் யாழ். கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தினரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..