யாழில் சேலைக்காக உயிரை மாய்த்த மாணவி - அதிர்ச்சியில் உறைந்து போன உறவினர்கள்

யாழ்ப்பாணத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆலயத் தேர்த் திருவிழாவுக்குச் சேலை வாங்கித் தராததால் விரக்தியடைந்த 18 வயதான மாணவி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இந்த அனர்த்தம் கொடிகாமம் எருவனில் நேற்று இடம்பெற்றுள்ளது.

வரணி சிட்டிவேரம் கண்ணகை அம்பாள் ஆலயத்தின் தேர்த் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. சக தோழிகள் சேலையுடன் வருவதால் தனக்கு சேலை வாங்கித் தருமாறு தாயாரிடம் கேட்டுள்ளார்.

எனினும் அதற்கு தாயார் மறுத்துள்ளமையினால் மாணவி திருவிழாவுக்குச் செல்லவில்லை.

நேற்று வீட்டிலுள்ளவர்கள் கோவிலுக்கு சென்றிருந்த நிலையில், விரக்தியடைந்த மாணவி தற்கொலை செய்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

ஆலயத்திலிருந்து வீடு திரும்பிய குடும்பத்தினர் மாணவி தவறான முடிவெடுத்துள்ளமை கண்டு அதிர்ச்சியடைந்து கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

பொலிஸார் அங்கு வந்து சடலத்தை மீட்டு சாவகச்சேரி மருத்துவமனை சவச்சாலையில் ஒப்படைத்துள்ளனர்.