யாழில் சற்று முன் வாள் வெட்டு!! காவாலிகளைத் துரத்திப் பிடித்த இளைஞர்கள்!!

கொக்குவிலில் சற்று முன்னர் வாள்வெட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன், வாள்வெட்டில் ஈடுபட்ட குழுவை சேர்ந்த ஒருவர் அந்தப் பகுதி இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவொன்றே வாள்வெட்டை நடத்தியுள்ளது.

வாள்வெட்டை நடத்திய குழுவை பிரதேச இளைஞர்கள் துரத்திச் சென்ற நிலையில் அந்தக் குழுவில் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதனால் அப் பகுதியில் சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், சம்பவ இடத்தை நோக்கி பொலிஸார் விரைவதாகவும் யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.