புலம்பெயர் குடும்பப் பெண்களுடன் மன்மதன் புஸ்பராசா திருவிளையாடல்!! பெண்கள் பலர் விவாகரத்து!!

வெளிநாடுகளில் வாழ்கின்ற பெண்களை குறிவைத்து பணம் கறக்கும் சம்பவம் ஒன்று அண்மையில் பதிவாகியுள்ளது

பல பெயர்களில் பலவேறு முகநூல்கள் ஊடாக குறிப்பாக வெளிநாடுகளில் வீடுகளில் வாழ்கின்ற பெண்களை குறிவைத்து பணம் கறக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் இலங்கையில் இருந்து கொண்டு வெளிநாடுகளில் உள்ள குடும்ப பெண்களை இலக்குவைத்து பல இலட்சம் ரூபாய்களை பல பெண்களிடம் இருந்து எடுத்துள்ளார்.

முதலில் முகநூல் ஊடாக தொடர்பு கொண்டு பெண்களை கவரும் விதத்தில் கவிதைகளை பதிவேற்றம் செய்து பின்னர் தான் இருதயநோய் என்றும் தனக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் தனக்கு இரண்டு கிட்ணிகளும் மாற்றவேண்டும் என்று பல்வேறு பட்ட வெளிநாட்டு வாழ் பெண்களிடம் இரங்கல் தகவல்களை கொடுத்து அவர்களுடன் கதைத்து அவர்களின் தொலைபேசி இலக்கம் பெற்று உரையாடல்களை மேற்கொண்டு அவர்களை காதல் வயப்படுத்தும் மன்தன் ஒருவர் இலங்கையில் இருந்து செயற்பட்டுள்ளமை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

நோர்வே நாட்டில் வசிக்கும் பெண் ஒருவர் இந்த மன்மதனிடம் பிடிகொடுத்து இலங்கை பணம் 32 இலட்சம் ரூபாவினை கொடுத்து ஏமாந்துள்ளார்.

இவரை நன்கு அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் அருகில் உள்ள பொலீஸ் நிலையத்திற்கு இனம் காட்டுமாறு வேண்டப்பட்டுள்ளதுடன் குறித்த மன்மதனை தேடி நோர்வே நாட்டில் வசிக்கும் பெண் இலங்கை வந்து பொலீஸாரின் உதவியினை நாடியுள்ளதாக அறிய முடிகின்றது.

இந்த மன்மதன் ஒரு அரசியல் கட்சியின் பின்னணியில் இலங்கையின் கொழும்பில் இருந்துள்ளதுடன் தற்போது வடக்கு மாவட்டம் ஒன்றில் வாழ்வதாக தெரியவந்துள்ளது.

பெயர் தங்கராசா புஸ்பராசா

இவரினால் பத்திற்கு மேற்பட்ட புலம்பெயர் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் இவரல் குடும்பங்களை பிரிந்த நிலையில் சிலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் புலம் பெயர்ந்து வாழ்கின் பெண்கள் இவ்வாறானவர்களை இனம் கண்டு விளிப்புடன் செயற்படுமாறு பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.