வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஏ. செல்வா!!

இராணுவத்தின் மனித நேய வேலை திட்டங்களுக்கான நாடளாவிய இணைப்பாளர் ஏ. செல்வா போரால் பாதிக்கப்பட்ட, வறிய, வருமானம் குறைந்த தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக  அவதாரம் எடுத்து உள்ளார்.

இவர் இராணுவ தளபதி லெப்டிணண்ட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி ஆகியோர் மூலமாக இராணுவத்தின் மனித நேய வேலை திட்டங்கள் மூலமான உச்ச பட்ச நன்மைகளை வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு பெற்று கொடுத்து வருகின்றார்.

யாழ். மாவட்டத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்கு உட்பட்ட காணிகள் அண்மைய காலங்களில் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வருவதில் இவரின் பங்கு காத்திரமானது. அதே போல ஆலயங்களுக்கான திருப்பணிகள், பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார, பொருளாதார மற்றும் சுய தொழில் உதவிகள், படிக்கின்ற பிள்ளைகளுக்கான சகாயங்கள், நோயாளர்களுக்கான இலவச சிகிச்சைகள், இளையோர்களுக்கான வேலை வாய்ப்புகள், வீடற்றவர்களுக்கான வீட்டு திட்டங்கள் என்று இராணுவத்தின் மனித நேய வேலை திட்டங்கள் பலவற்றையும் தமிழ் மக்களின் காலடிகளுக்கு கொண்டு வந்து உள்ள பெருமை இவரை சேரும்.

இதனால் இவருடைய நெல்லியடி அலுவலகத்துக்கு தினமும் ஆயிர கணக்கான பொதுமக்கள் வருகை தருவதுடன் அவர்களுடைய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு விரைவில் கிடைக்கும் என்கிற நம்பிக்கையுடன் முகம் மலர்ந்து திரும்பி செல்கின்றனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து மாத்திரம் அல்லாமல் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் இருந்தும், கிழக்கு மாகாணத்தில் இருந்தும்கூட மக்கள் கூட்டம் இவரின் அலுவலகத்துக்கு வருகின்றது.  

இதே நேரம் இவருடைய மனிதாபிமான பொதுநல சேவைகள் குறித்து கேள்விப்பட்டு இவரை பேட்டி எடுக்க ஊடகவியலாளர்கள் முண்டியடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.