யாழ் செல்வச்சந்தியில் இருந்து கதிர்காமத்துக்கு பாதயாத்திரை ஆரம்பம்

பாத யாத்திரைக் குழு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஊடாக கதிர்காமம் முருகன் ஆலயத்தை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்தி முருகன் ஆலயத்தில் இருந்து கதிர்காமம் முருகன் ஆலயத்துக்கான பாதயாத்திரை இன்று ஆரம்பமானது.

பாத யாத்திரைக் குழு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஊடாக கதிர்காமம் முருகன் ஆலயத்தை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டது.

பாத யாத்திரைக் குழு தாம் செல்லும் பகுதிகளில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயங்களில் தங்கி நின்று வழிபாடுகளை மேற்கொள்ளும் எனவும், கதிர்காம பாதயாத்திரக்குழு செல்லும் பிரதேசங்களில் உள்ள மக்கள் பாதயாத்திரைக் குழுவினருக்கு உதவிகள், பணிவிடைகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.