விஷால் நடிக்கும் ‘அயோக்யா’

விஷால் நடித்துவரும் புதிய படத்துக்கு ‘அயோக்யா’ எனப் பெயர் வைத்துள்ளனர். 

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், விஷால் நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸான படம் ‘அயோக்யா’. அர்ஜுன் வில்லனாகவும், சமந்தா ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். தகவல் திருட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், பெருவாரியான ரசிகர்களுக்குப் பிடித்திருக்கிறது.

இந்தப் படத்துக்குப் பிறகு, ஏ.ஆர்.முருகதாஸிடம் அசோஸியேட்டாகப் பணிபுரிந்த வெங்கட் மோகன் இயக்கத்தில் நடிக்கிறார் விஷால். ஆக்‌ஷன் திரில்லரான இந்தப் படத்தில், போலீஸாக நடிக்கிறார் விஷால். சமீபத்தில் வெளியான ‘இரும்புத்திரை’ படத்தில் அவர் மிலிட்டரி ஆபீஸராக நடித்தது குறிப்பிடத்தக்கது.

புதிய படத்துக்கு ‘அயோக்யா’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். இதில், விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். ‘விக்ரம் வேதா’ மூலம் புகழ்பெற்ற  சாம் சி.எஸ். இசையமைக்கிறார். லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.