யாழ். மாந­க­ரில் ஆளு­நர் றெஐி னோல்ட் குரேயின் புதிய திட்­டம்

யாழ்ப்­பாண மாந­க­ரத்­தைப் பசு­மைப் ­ப­டுத்­தும் வேலைத்­திட்­டத்­தின் கீழ் 4 ஆயி­ரம் மரக்­கன்­று­களை நடு­வ­தற்கு திட்­ட­மிடப்பட்­டுள்­ளது என்று வடக்கு மாகாண ஆளு­நர் றெஐி னோல்ட் குரே தெரி­வித்­தார்.

இந்த வேலைத்­திட்­ட­மா­னது கொழும்பு அரசு, வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சர், யாழ்.மாந­கர முதல்­வர், ஆகி­யோ­ரு­டன் இணைந்து முன்­னெ­டுக்­க­வுள்­ளது.

அரச திணைக்­க­ளங்­கள் மற்­றும் இரா­ணு­வத்­தின் ஒத்­து­ழைப்­பும் இதற்­குப் பெற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது என்­றும் அவர் தெரி­வித்­தார்.

இது தொடர்­பான கலந்­து­ரை­யா­டல் நேற்­றைய தினம் வடக்கு மாகாண ஆளு­நர் அலு­வ­ல­கத்­தில் இடம்­பெற்­றது.

இத­னைத் தொடர்ந்து இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர் சந்­திப்­பின் போதே அவர் இத­னைத் தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது;

உல­கத்­தில் தற்­போது கால­நிலை மாற்­ற­மா­னது ஏற்­பட்­டுள்­ளது. இது இயற்­கை­யின் சம­நி­லை­யில் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இவ்­வாறு கால­நிலை மாற்­ற­மா­னது ஏற்­பட்டு மழை வீச்சி பாதிப்­ப­டைந்­த­மைக்கு பல்­வேறு கார­ணங்­கள் இருந்­தா­லும் காட­ழிப்பே முதன்­மைக் கார­ண­மா­கும்..

பல மரங்­கள் வெட்டி அழிக்­கப்­பட்­டு காடு­கள் அழி­க்கப்­பட்­ட­மை­யால் பசு­மைத் தன்மை அற்­றுப்­போ­யுள்­ளது. இத­னால் தற்­போது ஏற்­பட்­டுள்ள பாதிப்­புக்­களை எதிர்­கா­லச் சந்­த­தி­யி­னர் எதிர்­கொள்­ளக் கூடாது என்­ப­தற்­காக கொழும்பு அரசு, வடக்கு மாகாண ஆளு­நர், வடக்கு மாகாண சபை மற்­றும் யாழ்.மாந­கர சபை ஆகி­யன இணைந்து இந்த வேலைத் திட்­டத்தை முன்­னெ­டுக்­க­வுள்­ளன.

இதன்­படி எதிர்­வ­ரும் ஜூன் மாதம் 05ஆம் திகதி மரக்­கன்­று­கள் நடப்­ப­ட­வுள்­ளன. மரக் கன்­று­கள் நடு­வ­தற்­கான இடங்­களை மாந­கர சபை தெரிவு செய்து தந்­துள்­ளது. அத்­து­டன் ஒவ்­வொரு நிலங்­க­ளின் தன்மை, நீரின் தன்மை என்­ப­வற்கு ஏற்ப அந்த இடங்­க­ளுக்­கு­ரிய மரங்­கள் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளன.

இவற்­றில் 600 மரங்­கள் வரை­யில் மாந­கர சபை­யால் பரா­ம­ரிக்­கப்­ப­ட­வுள்­ளன. ஏனைய பயன்­தரு மரங்­கள் பாட­சா­லை­க­ளி­டம் ஒப்­ப­டைக்­க­ப்ப­ட­வுள்­ளன.

யாழ்ப்­பா­ணத்­தில் பத்து மாதங்­கள் வரை­யில் வறட்­சி­யான சூழல் காணப்­ப­டு­வ­தால் இந்தச் செயற்­திட்­டத்­தின் மூலம் பச்சை நிற­மாக யாழ்ப்­பாண மாந­க­ரத்தை உரு­வாக்க முடி­யும்.

எனவேஇந்தச் செயற்­திட்­டத்­துக்கு அனைத்­துத் திணைக்­க­ளங்­க­ளி­ன­தும், அரச அதி­ப­ரி­ன­தும், பாட­சா­லை­க­ளி­ட­மும், இரா­ணு­வத்­தி­ன­ர­தும், பொது அமைப்­புக்­க­ளி­ன­தும் ஒத்­து­ழைப்­புக்­கள் பெறப்­பட்­டுள்­ளன என்­றார்.

ஊடக சந்­ததிப்­பில் வடக்­கு­மா­காண விவ­சாய அமைச்­சர், மா­ந­கர மேயர், ஆகி­யோ­ரும் கலந்­து­கொண்­டி­ருந்தார்­கள்.