யாழ். நோக்கி சென்ற வாகனம் மோதி ஒருவர் பலி

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

வவுனியா சந்தையில் தனது விவசாய உற்பத்தி பொருட்களை கொடுத்துவிட்டு துவிச்சக்கரவண்டியில் வீடு நோக்கி சென்றபோது, யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கன்டனர் ரக வாகனமொன்று குறித்த நபரை மோதியுள்ளது.

இந்த விபத்தில் துவிச்சக்கரவண்டியில் சென்ற ஓமந்தை சின்னக்குளத்தை சேர்ந்த 50 வதுடை ராசன் என்பவரே பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அவரது சடலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதுடன், வாகனத்தின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.