“மணிரத்னத்திடம் மாணவனாகக் கற்றுக் கொண்டேன்” – அருண் விஜய்

‘மணிரத்னத்திடம் மாணவனாகக் கற்றுக் கொண்டேன்’ எனத் தெரிவித்துள்ளார் அருண் விஜய்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. இதில் அரவிந்த் சாமி, ஜோதிகா, சிம்பு, விஜய் சேதுபதி, அதிதி ராவ், அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில் அபுதாபியில் நடைபெற்றது. அருண் விஜய்யின் போர்ஷன் முடிந்துவிட்ட நிலையில், “மிகச்சிறந்த அறிவாளி ஆசிரியரிடம் மாணவனாக இருந்தேன். அவரிடம் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். அவரிடம் பல வருடங்கள் பணியாற்றுவதற்கு இது அழைத்துச் செல்லும். மறக்க முடியாத ஒரு அனுபவம்” என மணிரத்னம் பற்றி புகழ்ந்துள்ளார் அருண் விஜய்.