இலங்கை அரசாங்கத்தை வியப்பில் ஆழ்த்திய யாழ்ப்பாண கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட உள்ளூர் மோட்டார் வாகனங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியுள்ளது.

யாழில் நடத்தட்ட, கழிவு பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட மோட்டார் வாகன கண்காட்சி தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இந்த மோட்டார் வாகனங்களை, யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் சரவணபவானந்த ஐயர் தயாரித்துள்ளார்.

உள்ளூர் தயாரிப்புகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த மோட்டார் வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.இந்த கண்காட்சியில் 4 ரக வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில்,

1. அல்ட்ரா லைட் பிக்கப் (இதில் இருவர் பயணிக்க முடியும்)

2. Jaffna Style Cool Car (இதில் ஒருவர் பயணிக்க முடியும்)

3. சோலா பவர் பேபி பவர் (சிறுவர்களுக்கானது)

4. பெடல் பவர் (சிறுவர்களுக்கானது)

அத்துடன் பேராசிரியர் சரவணபவானந்த ஐயரினால் மோட்டார்சைக்கிள் ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.