யாழில் அதிகாலை கொள்ளையனின் கத்திக் குத்துக்கு உள்ளாகி குடும்பஸ்தர் மரணம்!!

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடி வடக்கு பிள்ளையார் கோவிலுக்கு அருகிலுள்ள வீட்டுக்குள் கடந்த 10ஆம் திகதி வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு கொள்ளையன் ஒருவன் புகுந்துள்ளான்.

அந்த வீட்டில் தம்பதியரான சிவலோகநாதன் செல்வராசா (வயது – 62 ) செல்வராசா இராஜேஸ்வரி (வயது -58) வசித்து வந்தனர்.

கொள்ளையனை பிடிக்க முற்றபட்டபோது, அவனின் கத்திக் குத்துக்கு இலக்காகி இருவரும் படுகாயமடைந்தனர்.

அவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிசிச்சை பெற்று வந்தனர்.

எனினும் சிகிச்சை பயனின்றி முதியவர் இன்று காலை உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் சுன்னாகம் பொலிஸார், குற்றவாளியைத் தேடி வலைவீசியுள்ளதாகத் தெரிவித்தனர்.