கோண்டாவிலில் சோ்விஸ் உரிமையாளர் வாகனத்தில் வந்த மர்ம நபர்களால் கடத்தல்!!

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சேர்விஸ் நிலையமொன்றின் உரிமையாளா் இனந்தெரியாத நபர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள சேவிஸ் நிலைய உரிமையாளரையே இன்று (12-05-2018) காலை 8 மணியளவில் காரில் வந்த நபர்களால் சேவில் நிலையத்தில் வைத்து கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு சேவிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர்களினால் அறிவிக்கப்பட்டதன் பிரகாரம், கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனா்.