யாழில் மக்களின் எதிர்ப்பை மீறி அரங்கேறிய கொடூரம்! போராடும் மக்கள்

யாழில் கிராம சேவகர் பிரிவு ஜே87 முஸ்லிம் கல்லூரி வீதி ஜின்னா வீதி ஹலீமா ஒழுங்கை ஆகிய பிரதேசத்தில் நட்சத்திர ஹோட்டலோன்று யாழ் மாநகரசபையின் அனுமதியின்றி, நகர அபிவிருத்தி அதிகாசபையின் நேரடி அனுமதிபெற்றே கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது.

இதனை பிரதேச மக்கள் வன்மையாக எதிர்க்கின்றனர்மேற்படி இந்த பிரதேசத்தில் இத்தகைய ஒரு வர்த்தக நோக்கம் கொண்ட ஹோட்டலோ அல்லது மதுபான நிலையமோ நிறுவப்படுவதை நாம் அனுமதிக்கப்போவதில்லை என பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

யாழ்ப்பணத்தில் காணிகள் இல்லாத நிலையில் பல குடும்பங்கள் வாழ்கின்றனர்.இது குடியிருப்பு பிரதேசம் என்ற காரணத்தினால் இப் பிரதேசத்தில் இப்படியான பாரிய நோக்கிலான வியாபார கட்டிடங்களுக்கு அனுமதி அளிப்பதனை இது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நிரந்தரமாக தடை செய்வதற்க்கான சட்ட ரீதியான எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறனர்

இதற்கு நிரந்தரமாக தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை 12.05.2018 இன்று முதல் அமுலாகும் வரையிலான உடனடி தடை உத்தரவு யாழ் மாநகர சபையினால் பிறப்பிக்கப்படல் வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.