யாழில் விசித்திரம்! 27 வருடத்தின் முன் இறந்தவருக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பிய வங்கி

சாவகச்சேரியில் மரணமாகி 27 வருடத்தின் பின், அவருக்கு வங்கியிலிருந்து கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கடந்தவாரம் இந்த சம்பவம் நடந்தது.

சரசாலை தெற்கு சாவகச்சேரியை சேர்ந்தவர் தியாகராசா கமலாவதி. 1991 ஆம் ஆண்டு, நான்காவது பிரசவத்தின் போது சாவகச்சேரி வைத்தியசாலையில் மரணமாகிவிட்டார்.

அவரது கணவர் பரராஜசேகரமும் 1998 இல் ஏற்பட்ட விபத்தில் அகாலமரணமாகி விட்டார்.

இந் நிலையில் 03.05.2018 திகதியிடப்பட்டு தியாகாராசா கமலாவதி, மணிமங்களம், சரசாலை தெற்கு சரசாலை என்ற அவரது பிறந்த வீட்டு முகவரிக்கு, தந்தையின் முன்பெயர் குறிப்பிட்டு சாவகச்சேரி மக்கள் வங்கியால் கடிதமொன்று அனுப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில்- சோரன்பற்று, பளையை சேர்ந்த ஒருவர் வங்கியில் பெற்ற 500000 ரூபா கடன் திருப்பி செலுத்தப்படவில்லையென்றும், தியாகாராசா கமலாவதி ஆகிய நீங்கள் பிணையாளியாக கையெழுத்திட்டுள்ளீர்கள், கடனை உடனடியாக செலுத்தாவிட்டால், பிணையாளி அதற்கு பொறுப்பேற்க வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.