யாழில் கண்டபடி ஓடி பலரை இடித்து தள்ளிய வாகனம்!! இளைஞர்கள் துரத்த சாரதி தப்பியோட்டம்!!(Photos)

நல்லூர் மற்றும் பரமேஸ்வராச்சந்திப் பகுதிகளில் அடுத்தடுத்து விபத்துக்களை ஏற்படுத்தி தப்பியோடிய வாகனம் இளைஞர்களால் துரத்திப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும் வாகனத்தைக் கைவிட்டு சாரதி தப்பி ஓடிவிட்டார்.

இந்தச் சம்பவம் இன்று (9) மாலை இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதி கோவில்வீதிப் பகுதியூடாகப் பயணித்தவேளையில் பருத்தித்துறை வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை மோதிய நிலையில் நிறுத்தாமல் சென்ற மகேந்திரா இன வாகனத்தை சில இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் விரட்டியுள்ளனர்.

இதன்போது மகேந்திராவின் சாராதி வாகனத்தை நிறுத்தாது வேகமாச் செலுத்தி திருநெல்வேலி சிவன் அம்மன் வீதியூடாகப் பயணித்து பலாலி வீதியை அடைந்துள்ளார்.

பலாலி வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஓருவரை மோதிவிட்டு தப்பியோட முயன்ற சமயம் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர் வாகனத்தை மடக்க முயன்றுள்ளார்.

இதனால் வாகனத்தின் சாரதி வாகனத்தை கைவிட்டு தப்பியோடினார்.

இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அந்த வாகனத்தை சோதனையிட்ட பொலிஸார், அதற்குள் மர துண்டுகள் இருப்பதை கண்டறிந்தனர்.

அவை அனுமதியற்று ஏற்றிச் செல்லப்பட்ட மரமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வாகனத்தை கைப்பற்றி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.