யாழில் தந்தையின் விபரீத முடிவு - ஆபத்தான நிலையில் மகன், மகள்

யாழ்ப்பாணத்தில் தந்தையின் விபரீத முடிவினால் மகன், மகள் உட்பட அவரும் ஆபத்தான நிலையில் உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாவகச்சேரி பிரதேசத்தில் தந்தை ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தானும் அருந்தியுள்ளார்.

இந்த அனர்த்தம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

35 வயதான தந்தை தனது 10 வயதுடைய மகன் மற்றும் 7 வயதுடைய மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் அருந்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விஷம் அருந்தியமையினால் ஆபத்தான நிலையில் உள்ள குறித்த மூவரும் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக இரண்டு பிள்ளைகள் மற்றும் கணவனை பிரித்து தாய் வாழ்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் விஷமருந்தியமைக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.