அட ஜனாதிபதி மைத்திரி இப்படிப்பட்டவரா ? அம்பலமான ரகசியம்!

அரசனாக செயற்பட தாம் தயார் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா நிர்வாக சேவை சங்கத்தின் 33 வது வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்

நான் அமைச்சராக இருந்த காலத்திலும் ஜனாதிபதியாக ஆகிய பின்னரும், எனது மனைவி வீட்டில் இருந்து வாழை இலையில் சுற்றிக்கொடுக்கும் சோற்று பொதியையே நான் மதிய உணவாக உண்கிறேன்.

இதனை நான் முன்னர் யாருக்கும் சொன்னது கிடையாது என நினைக்கின்றேன்.

நான் உண்ணும் போது இங்கு வந்த என் நண்பர்கள் மூலம் இது வெளியே சென்றிருக்கும் என்று நினைக்கின்றேன்.

இதற்கு ஒரு தேரர் சொல்லியிருக்கிறார் அரசன் அரசனாக உண்ண வேண்டும்.

ஜனாதிபதி, ஜனாதிபதியாக உண்ணவேண்டும்.

ஜனாதிபதி கிராம சேவகரை போல் உண்டு பயனில்லை.

அதனால் ஜனாதிபதியின் வசதி வாய்ப்புகளை இவருக்கு அனுபவிக்க தெரியாது என்று கூறியிருந்தார்.

அதாவது அரசன் உண்டதை போல் என்னையும் உண்ணச் சொல்கிறார். அப்படி உண்ண என்னால் முடியாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.