கிளிநொச்சியில் மூவர் கைது

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் போலி நாணயத்தாளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 500 ரூபா நாணயத்தாளொன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாணயத்தாளை வைத்திருந்த நபர், நாணயத்தாளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட மடிக்கணியை வைத்திருந்தவர் மற்றும், இரண்டு சந்தேகநபர்களுக்கும் தங்குமிட வசதிகளை வழங்கிய நபரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வவுனியா, வட்டக்கச்சி மற்றும் இராமநாதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 24 மற்றும் 22 வயதானவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்களை இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p> </div>