‘பைனல் டெஸ்டினேஷன்’ படத்தைத் தழுவி எடுக்கப்படும் தமிழ் படம்

‘பைனல் டெஸ்டினேஷன்’ படத்தைத் தழுவி ‘முன் அறிவன்’ என்ற தமிழ் படம் உருவாக இருக்கிறது.

கார்த்திக் சுப்பராஜின் உதவியாளரான விஜயராஜ் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘முன் அறிவன்’. இந்தப் படத்தை லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகர் தயாரிக்கிறார். வேலை நிறுத்தம் முடிந்தபிறகு இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.

ஹாலிவுட் படமான ‘பைனல் டெஸ்டினேஷன்’ படத்தைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்படுகிறது. அதேசமயம், தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் இந்தப் படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. ஆதி இப்ராஹிம் மற்றும் அஞ்சு குரியன் இருவரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.