பார்த்திபன் வீட்டில் தங்க கட்டி, விருதுகள் கொள்ளை...

நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் வீட்டில் தங்க முலாம் பூசப்பட்ட விருதுகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் பார்த்திபன் திருவான்மியூரில் உள்ள காமராஜர் நகரில் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். 

அந்நிலையில், அவரின் வீட்டின் பூட்டை உடைத்து, வீட்டில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட விருதுகள், கேடயங்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பார்த்திபனின் மேனேஜர் அளித்த புகாரில் நீலாங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது வீட்டில் பணிபுரிந்து வந்த ஒரு பெண்மணியின் மீது சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.