நீட் தேர்வுக்காக உயிர்நீத்த அனிதா படத்திற்கு இசையமைக்கிறார் பி.சுசீலா

கடந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெற்றதால் 1176 மதிப்பெண்கள் வாங்கிய அரியலூர் மாணவி அனிதாவுக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த அனிதா தற்கொலை செய்த் கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை எழுப்பிய நிலையில் நீட் தேர்வை எதிர்த்து உயிர்நீத்த அரியலூர் அனிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஒன்று தமிழில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் பிக்பாஸ் ஜூலி அனிதா கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கோலிவுட் திரையுலகின் ஸ்டிரைக் முடிவுக்கு வந்த பின்னர் தொடங்கவுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா இசையமைக்கவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இசையமைப்பது குறித்து பி.சுசீலா கூறியபோது, 'இசையமைப்பதில் தனக்கு அதிக ஆர்வம் இல்லை என்றும் இருப்பினும் படக்குழுவினர் கேட்டு கொண்டதாலும், படத்தின் கதை மனதிற்கு பிடித்ததாலும் இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.