மெர்குரி படத்துக்காக மன்னிப்பு கேட்ட கார்த்திக் சுப்புராஜ்!

மெர்குரி திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியாகத காரணத்திற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

தமிழகத்தில் டிஜிட்டல் சேவை வழங்கும் க்யூப் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டத்தால் கடந்த மார்ச் மாதம் முதல் எந்த படமும் ரிலீஸாகவில்லை.

இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த மெர்குரி படம் நேற்று தமிழகத்தை தவிர பிற பகுதிகளில் வெளியானது.

k

இது தொடர்பாக கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட அறிக்கையில், இன்று மெர்குரி திரைப்படம் என் தாயகம், தமிழகம் தவிர உலகமெங்கும் 1000 திரையரங்குகளில் பெரிய ரிலீஸாகியுள்ளது. இந்த படம் எனது தாய் மண்ணான தமிழகம் தவிர பிற இடங்களில் மட்டும் ரிலீஸாகியிருப்பது எனக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது.

மிக விரைவில் தமிழ் சினிமாவில் நடக்கும் பிரச்சனைகள் முடிவடைந்து படம் உங்கள் பார்வைக்கு வந்துவிடும். அதுவரை பொறுத்திருங்கள்.. தயவு செய்து யாரும் பைரஸி இணையதளங்களின் வழியாகப் படத்தைப்  பார்க்காதீர்கள். இது எனது அன்பிற்குரிய தமிழ் ரசிகர்களுக்கு பணிவான கோரிக்கை" என்று கூறியுள்ளார்.