வலிகாமம் வடக்கு பகுதியில் விடுவிக்கப்பட்ட தமிழ்மக்களின் பகுதிகளில் திருடர்கள்! (Photos)

வலிகாமம் வடக்கு சிறிலங்கா இராணுவத்தின் உயர்பாதுகாப்பு ஆக்கிரமிப்பிலிருந்து 863 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்ட நிலையில் மரங்களை களவாக வெட்டும் சம்பவங்கள் மற்றும் வீட்டு தளபாடங்களை களவாடும் சம் பவங்கள் இடம்பெற்று வருகிறது.

இராணுவத்தின் உயர்பாதுகாப்பு ஆக்கிரமிப்பிலிருந்து தமிழ் மக்களுடைய காணிகள் விடுவிக்கப்பட்ட பின்னர் இரும்பு வியாபாரிகள் மற்றும், மரங்களை களவாடுபவர்கள், வீட்டு தளபாடங்களை களவாடும் நபர்கள் மக்களின் காணிகளுக்குள் புகுந்து வருகின்றனர்.

நேற்றய தினம் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி பகுதியில் மரங்களை களவாடும் சம்பவங்கள் இடம்பெற்று வருகிறது. இதனையடுத் து இன்று மயிலிட்டி மக்கள் திருடர்களுக்கு எச்சரிக்கை விடுத்து சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.