யாழில் ஓடும் பேரூந்தில் திருவிளையாடல் புரிந்த நபரால் பரபரப்பு!!

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த பயணியிடம் இருந்து பெருந்தொகையான கள்ள நோட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பயணியிடம் இருந்து 45, 1000 ரூபாய் பணத்தாள்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் முன்னர் இருந்த பேருந்து தரிப்பிடத்தில் வைத்து, நேற்று மாலை சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 35 வயதுடையவர் என்பதுடன், சந்தேக நபர் அலவ்வ – கோகொலான பிரதேசத்தினை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் போலி பணம் அச்சிடும் மோசடியாளர்களிடம் இருந்து இந்த சந்தேக நபர் பணம் பெற்று செல்வதாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.

அதற்கமைய பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.