கிளிநொச்சியில் இடம்பெற்ற தமிழ் சிங்கள புத்தாண்டு நிகழ்வுகள்

இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தமிழ், சிங்கள புத்தாண்டு நிகழ்வுகள் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று காலை கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் நடைபெற்றுள்ளது.

கிளிநொச்சி 57 படை பிரிவினரும், மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வ மத பிரார்த்தனைகளுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வில் விளையாட்டுக்கள், கலை நிகழ்வுகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டுள்ளதுடன், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும், கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரியாக செயற்பட்டு இன்றுடன் பதவி உயர்வு பெற்று இடமாற்றம் பெற்று செல்லும் மேஜர் ஜெனரல் அஜித் காரிய கரவண்ண நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.