யாழில் போதைப்பொருள் விற்பனை நிலையம் அதிரடியாகச் சுற்றிவளைப்பு

யாழில் போதைப்பொருள் விற்பனை நிலையம் அதிரடியாகச் சுற்றிவளைக்கப்பட்ட காட்சிகள் இதோ!!

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் இயங்கிய தடை செய்யப்பட்ட மாவா போதைப்பொருள் விற்பனை நிலையம் இன்று மாலை (10) முற்றுகையிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் போதைப்பொருள் விற்பனை நிலையம் அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்ட காட்சிகள்

 

இதன்போது அந்த நிலையத்தை நடத்தியவர் எனத் தெரிவிக்கப்பட்ட புத்தளத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரும் மாவா போதைப் பொருளை வாங்குவதற்கு வந்த 4 இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் கூறினர்.

 

 

“அங்கிருந்து பெருமளவு மாவா போதைப் பொருள் பொட்டலங்களும் மாவா போதைப் பொருள் தயாரிப்பதற்கான மூலப் பொருள்களும் கைப்பற்றப்பட்டன.

வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித பெர்னாண்டோவில் பணிப்புக்கமையவே இந்த முற்றுகை சிறப்பு பொலிஸ் பிரிவால் முன்னெடுக்கப்பட்டது.

அந்த நிலையத்தால் தினமும் ஒரு லட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியான மாவா போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது” என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.