6 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் சாவகச்சேரி மட்டுவிலில் கைது

 

சாவகச்சேரி, மட்டுவில் தெற்கு பகுதியில் இன்று மாலை 6 கிலோகிராம் கேரளா கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

“சாவகச்சேரி குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 6 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டது.

சந்தேகநபர் நாளை சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவித்தனர்.